News March 6, 2025

காவி நிறத்திற்கு மாறும் பள்ளிகள்

image

ஒடிஷாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் காவி, சிகப்பு வண்ணம் பூச ஆளும் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம், கல்வியைக் காவி மயமாக்கும் முயற்சி இது என்று விமர்சித்துள்ளது. ஆனால், பள்ளிக் கட்டடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இது என்று ஆளுங்கட்சி விளக்கமளித்துள்ளது.

Similar News

News March 6, 2025

3 பந்தில் 4 விக்கெட்

image

பாக்., வீரர்கள் தற்போது உள்நாட்டு தொடரில் விளையாடுகின்றனர். இதில் PTV அணிக்கு எதிரான போட்டியில் SBP அணியின் ஷாசாத் 3 பந்தில் 4 விக்கெட்டை எடுத்தார். அவர் வீசிய 26 ஓவரின் 3, 4வது பந்தில் PTVயின் உமர் அமீன், ஃபவாத் ஆலம் அவுட் ஆக, 5வது பந்தை எதிர்கொள்ள வந்த சவுத் ஷகீல் 3 நிமிடம் தாமதமாக வந்ததால் Timed Out விதிப்படி பந்தை சந்திக்காமலே அவுட்டானார். அதன்பின் 26.5 பந்தில் முகமது இர்பான் அவுட் ஆனார்.

News March 6, 2025

போர்க்களத்திலும் பூ பூக்கத்தானே செய்கிறது!

image

மேலே காணப்படும் இந்த போட்டோதான் இன்று உலகம் முழுவதும் வைரல். இஸ்ரேலின் தாக்குதலால் தவிடு பொடியான காசா பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு திறந்த நிகழ்வுதான் இது. கட்டட இடிபாடுகளுக்கிடையே நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இப்படியான காட்சிகளைப் பார்க்கும்போது மனம் கனத்துப் போகாமல் என்ன செய்யும்!

News March 6, 2025

இது தலைகுனிவு இல்லையா முதல்வரே? அண்ணாமலை

image

அரசு நிறுவனத்தில் இன்று ED ரெய்டு நடைபெற்று வருகிறது. 2016இல் தலைமைச் செயலகத்தில் ED நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன முதல்வர் அவர்களே என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு தான் இந்த ரெய்டு. வழக்கம்போல் இந்த செய்தியையும் திசை திருப்ப முடியுமா என்று பாருங்கள் என சாடியுள்ளார்.

error: Content is protected !!