News September 29, 2025
புதன்கிழமை பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

அக்.2 விஜயதசமி அன்று அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்கிறது.
Similar News
News September 29, 2025
அரசின் தவறை மூடி மறைக்கும் Eyewash ஆணையம்: EPS

கரூர் துயரத்திற்கு உரிய நீதி கிடைக்க CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். கரூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் அரசியல் செய்யவில்லை எனவும், CM ஸ்டாலின் தான் வீடியோ வெளியிட்டு அரசியல் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஒருநபர் விசாரணை ஆணையம், அரசின் தவறுகளை மூடிமறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுவதாகவும் சாடியுள்ளார்.
News September 29, 2025
கருத்து சுதந்திரத்தில் உறுதியாக நிற்கும் எலான் மஸ்க்

கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் எலான் மஸ்கின் X தளம் அறிவித்துள்ளது. சஹ்யோக் போர்ட்டலை பயன்படுத்தி, மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களை நீக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக X வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், இந்தியாவில் சேவைகளை வழங்க, இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்தது.
News September 29, 2025
PM மோடி தான் ஸ்கோர் செய்தார்: சூர்யகுமார் யாதவ்

ஆசிய கோப்பையில் இந்தியா வென்றதை, விளையாட்டில் ஆபரேஷன் சிந்தூர் என PM மோடி பாராட்டியது குறித்து சூர்யகுமார் யாதவ்விடம் கேட்கப்பட்டது. அதற்கு, நாட்டின் தலைவர், முன்களத்தில் நின்று போராடும் போது, தங்களை போன்ற கிரிக்கெட் வீரர்கள் எளிதாக விளையாட முடிந்ததாக அவர் தெரிவித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூரில் PM மோடி தான் ஸ்கோர் செய்ததாகவும், இந்த வெற்றியை நாடே கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.