News January 2, 2025
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1-7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட கல்விப் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
உஷாரான செங்கோட்டையன்.. தவெகவில் 3 தலைவர்கள்?

EX MLA சின்னசாமியுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே, இடையில் நுழைந்த செந்தில் பாலாஜி, அவரை தட்டித்தூக்கி திமுகவில் இணைத்ததாக கூறப்படுகிறது. இதுபோல் இனி நடந்துவிடக் கூடாது என உஷாரான செங்கோட்டையன், சென்னை, டெல்டா, கொங்குவை சேர்ந்த 3 முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் தவெகவில் இணையவிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News December 4, 2025
தங்கம் விலை இப்படி மாறியிருக்கே!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $22 உயர்ந்து, $4,211.56-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.4) மட்டும் சவரனுக்கு ₹160 உயர்ந்து, ₹96,480-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
News December 4, 2025
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் BJP செய்யும் சூழ்ச்சி: காங்., MP

பாஜகவின் வேலையே மதங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்வதுதான் என MP சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சிகளுக்கு TN இடமளிக்கக்கூடாது என்ற அவர், இங்கிருக்கும் கலாசாரம் வேறு என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் கலாசாரமாக தமிழ் கலாசாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


