News March 16, 2025
டெங்குவால் பள்ளி மாணவி மரணம்

வேலூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மாணவி சிவானி (13) டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News July 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News July 10, 2025
X நிறுவன சிஇஓ ராஜினாமா

X நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான (சிஇஓ) லிண்டா யாக்காரினோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி, அதன் பெயரை X என மாற்றினார். அதன்பிறகும் சிஇஓ பதவியில் 2 ஆண்டுகளாக லிண்டா நீடித்தார். இந்நிலையில் தனது பதவி விலகல் குறித்து சமூகவலைதளத்தில் லிண்டா பதிவிட்டுள்ளார். இதை வரவேற்று பதிவிட்டுள்ள எலான் மஸ்க், உங்கள் பங்களிப்புக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
News July 10, 2025
மோடிக்கு நாட்டின் உயரிய விருதை வழங்கிய நமீபியா

நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘வெல்விட்சியா மிரபலீஸ்’ விருது PM மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. உலக அமைதி, சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக மோடிக்கு இவ்விருதை நமீபியா வழங்கியுள்ளது. உயரிய விருது தனக்கு வழங்கப்பட்டதை பெருமையாக கருதுவதாக மோடி தெரிவித்தார். சர்வதேச நாடுகளிடம் இருந்து அவருக்கு கிடைக்கும் 27-வது விருது என்பது குறிப்பிடத்தக்கது.