News July 8, 2025
பள்ளி வேன் விபத்து… விஜய் உருக்கமாக இரங்கல்

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், விபத்து நடந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News July 8, 2025
குபேரா கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

தனுஷ், நாகார்ஜூனா, ரஷ்மிகா கூட்டணியில் உருவான ‘குபேரா’ படம் தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 20-ம் தேதி வெளியான இப்படம் முதல் வாரத்தில் र100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன்பின், வேறு படங்கள் ரிலீஸான நிலையில், குபேராவின் வசூல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், இதுவரையான 18 நாள்களில் குபேராவின் உலகளாவிய வசூல் र134.25 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News July 8, 2025
ஆண்களை பாதிக்கும் வெரிக்கோசில்

குழந்தையின்மை பிரச்னைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை & தரக் குறைவு. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று வெரிக்கோசில் பிரச்னையாகும். விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய் வீங்குவதே வெரிக்கோசில். இதனால், விதைப்பைகளுக்கு ரத்தவோட்டம் பாதிப்பதால், விந்தணு உற்பத்தி பாதித்து எண்ணிக்கையும் தரமும் குறையும். இப்பிரச்னை உள்ளோர் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும்.
News July 8, 2025
மழைக் காலத்தில் இதை கவனியுங்க…

பைக், கார் வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வண்டிக்கு தேவையான காப்பீடு அம்சங்களை உள்ளடக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி (காலாவதி ஆகாமல்) இருப்பதை உறுதிச் செய்துகொள்ளுங்கள். மழையில் வாகனம் அழுக்காக போகிறது என்பதால், மழை முடிந்தபின் சர்வீஸ் செய்துகொள்ளலாம் என அசட்டையாக இருந்தால், பழுது ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருங்கள்!