News August 8, 2024
நெல்லையில் கத்தியுடன் வந்த பள்ளி மாணவர்கள் கைது

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சங்கர ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரை கொல்ல கத்தியுடன் வந்த +2 மாணவர்கள் 3 கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒழுங்கினமாக நடந்து கொண்ட காரணத்திற்காக மதிப்பெண்னை குறைத்த ஆசிரியரை கொல்ல வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 14, 2025
நெல்லை: சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள் கவனத்திற்கு

நெல்லை மாவட்டத்தில் அரசு தேர்வு துறை மூலம் மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை அனைவருக்கும் உரிய மேல்நிலை பொதுத்தேர்வு எழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை பெறாதவர்களுக்கு வருகிற ஜனவரி 10ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கபட்டுள்ளது. அதன் பின்னர் அறிவிப்பு இன்றி அளிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே சம்பந்தபட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News October 14, 2025
நெல்லை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<
News October 14, 2025
நெல்லை: கோழிக்கழிவுகள் விவகாரம் – ஒருவர் கைது

நெல்லை, மதவக்குறிச்சி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் மர்ம நபர்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட கோழிகளின் உடல்கள் கோழி கழிவுகளை கொட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு மற்றும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுக்குறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் டவுன் அண்ணா தெருவை சேர்ந்த பரத்மாரி என்பவர் கோழிக்கழிவுகளை கொட்டியது தெரியவந்தது. அவர் கைது செய்யபட்டார்.