News September 30, 2025
அக்.2 அன்று பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

அக்.2 விஜயதசமி அன்று அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்கிறது.
Similar News
News October 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 1, 2025
எல்லோருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்!

*அறிவின் தெய்வம் சரஸ்வதி உங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறந்த அறிவையும் ஞானத்தையும் வழங்க வாழ்த்துகள். *கல்வியின் அதிபதியை சரஸ்வதி பூஜை நன்னாளில் போற்றுவோம். *அறிவுக் கடவுளின் அருளால் அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரட்டும். *படிப்பிற்கும், செல்வத்திற்கும் அதிபதியான சரஸ்வதி தேவியின் அருள் உங்களை சேர சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் இதை SHARE பண்ணுங்க..
News October 1, 2025
எண்ணூர் விபத்து: ₹10 லட்சம் நிதியுதவி CM அறிவித்தார்

எண்ணூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். கட்டுமானப் பணியின் போது 9 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்கி CM உத்தரவிட்டுள்ளார். இதே போல PM மோடி உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.