News October 21, 2025
பள்ளிகளுக்கு விடுமுறையா? கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு

மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட <<18063262>>கலெக்டர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை<<>> நடத்தினார். அப்போது, அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அறிவுறுத்தினார். மேலும், மழையின் தீவிரத்தைக் கண்காணித்து நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகவே, இரவுக்குள் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Similar News
News October 22, 2025
4 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கனில் இந்திய தூதரகம்

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திய அரசின் அலுவலகத்தை தூதரகமாக மேம்படுத்தி, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இருதரப்பு உறவை மேம்படுத்தும் முயற்சி இதுவென்றும் தெரிவித்துள்ளது. 2021-ல் தாலிபன்கள் ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றியதும், இந்தியா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது. இருப்பினும், 2022-ல் சில அதிகாரிகளுடன் அலுவல் குழு அனுப்பி வைக்கப்பட்டது.
News October 22, 2025
ராசி பலன்கள் (22.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 21, 2025
பருவமழை: TN அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவுமாறு செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார். மழைக்காலத்தில் அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என X-ல் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், மழைக்காலத்தில் எந்தவித சிக்கல் ஏற்பட்டாலும் பொதுமக்கள் உடனடியாக அவசர உதவி எண் 1077-ஐ தொடர்பு கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.