News August 4, 2024
டிசம்பர் வரை ஊதியம் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தற்காலிக கணினிப் பயிற்றுநர்களுக்கு, டிசம்பர் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2006 முதல் 1,880 கணினிப் பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது பணிக்காலம் ஜூலையுடன் முடிவடைந்த நிலையில், அதனை டிசம்பர் வரை நீட்டித்தும், அதுவரை சம்பள பட்டியல் தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் கொடுப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 20, 2026
CPI கட்சியால் CPM அதிருப்தியா?

காங்.,க்கு கூடுதல் தொகுதி ஒதுக்கிய திமுக, புதிதாக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு இரண்டு இலக்க சீட்டை கொடுக்க தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு காங்., தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததால், தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் வேண்டுமென விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனால், CPI கட்சி 5 சீட்களுக்கு ஒப்புக்கொண்டதால், CPM அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
News March 20, 2026
நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு பேசிய EPS கூறியுள்ளார். திமுகவும் ஓரிரு நாள்களில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகளுமே தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய 5 சவரன்(40 கிராம்) வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.
News March 20, 2026
கருணாநிதியின் டயலாக்கை மாற்றினாரா ஸ்டாலின்?

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். அதில், ‘சீட் கேட்டு வந்த எல்லோருக்கும் அறிவாலயத்தில் சீட் (உட்கார இருக்கை) கொடுத்திருக்கிறேன்’ என ஸ்டாலின் பேசியதாக திமுகவினர் கூறுகின்றனர். முன்னதாக, கருணாநிதி இருந்தபோது ஒருத்தருக்கு சீட் (வேட்பாளர்) கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு ‘என் இதயத்தில் இடம் இருக்கு’ என கூறுவாராம்.


