News August 5, 2024

பள்ளி, கல்லூரி மாணவர்கள் முன்பதிவு செய்யலாம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-25க்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் 53 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் <>இந்த<<>> இணையதளத்தில் பதிவு செய்யலாம். அனைத்து மாவட்டங்களிலும் இந்த போட்டிகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 10, 2026

ஜன நாயகனை டவுன்லோட் செய்யாதீங்க.. கடும் எச்சரிக்கை

image

ஜன நாயகன் படத்தை SM-ல் பகிர்ந்தாலோ, பதிவிறக்கம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது. சட்டவிரோதமாக படத்தை டவுன்லோட் செய்து பரப்பியவர் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2026

வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 உயர்ந்தது

image

தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் இன்று (ஏப்.10) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹265-க்கும், 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நேற்று ₹5,000 குறைந்த நிலையில், இன்று ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News April 10, 2026

உதயநிதியுடன் எல்.முருகன் கூட்டு: ஆதவ் அர்ஜுனா

image

‘ஜனநாயகன்’ படத்தை உதயநிதியுடன் சேர்ந்து எல்.முருகன் முடக்கியதாக ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார். எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவுக்கு பராசக்தி படக்குழுவை அனுப்பிவைத்தது உதயநிதி என சாடிய அவர், விஜய்யை மிரட்டும் வகையிலும், மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் படத்தை வெளியிட்டுள்ளனர்; திமுகவினர் எம்ஜிஆருக்கும் இதேபோன்ற நெருக்கடிகளை கொடுத்தனர் என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!