News October 20, 2025
இவர்களுக்கு மாதம் ₹1,000 கிடைக்கும்.. அரசு திட்டம்

காசநோயாளிகளுக்கு மாதா மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். https://nikshay.in/Home/Index -ல் விண்ணப்பிக்கலாம். அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க.
Similar News
News March 31, 2026
வணிக கேஸ் சிலிண்டர்.. அதிர்ச்சி செய்தி

வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் நாடு முழுவதும் பல சிறு ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் உணவுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில், நாளை ஏப்.1 என்பதால், சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இது ஹோட்டல் உரிமையாளர்கள், ஹோட்டல் உணவை நம்பி வெளியூரில் இருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 31, 2026
வைபவை சீனியர் அணிக்கு அனுப்புங்க: மைக்கேல் வான்

வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்கு விரைவில் தேர்வு செய்ய வேண்டுமென BCCI-க்கு இங்கிலாந்து Ex கேப்டன் மைக்கேல் வான் பரிந்துரைத்துள்ளார். CSK-க்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த சூர்யவன்ஷியின் பேட்டிங்கை பாராட்டிய அவர், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார். மூத்த வீரர்களுடன் இருந்தால் அவருக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்றார்.
News March 31, 2026
மே.வங்கத்தில் வாக்கு திருட்டு செய்ய சதி: மம்தா பானர்ஜி

மே.வங்கத்தில் FORM 6-ஐ பயன்படுத்தி வெளி ஆள்களை முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க சதி நடப்பதாக CEC-க்கு CM மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா, டெல்லியில் நடந்த வாக்கு திருட்டு என்ற மோசமான அரசியலை பாஜக இங்கும் செய்வதாகவும் சாடியுள்ளார். மேலும், 60 லட்சம் நேர்மையான வாக்காளர்களின் மனுக்கள் இன்னும் பரிசீலனை செய்யாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


