News March 30, 2025
எம்புரானில் நீக்கப்பட உள்ள காட்சிகள்? என்னாச்சு..

மோகன்லாலின் எம்புரான் படம் வியாழக்கிழமை வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் குஜராத் கலவரம் போன்ற காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்தது. இதனால் படத்தில் இருந்து 17 காட்சிகளில் திருத்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். படத்தின் புதிய வெர்ஷன் ஏப்ரல் 2ஆம் தேதியில் இருந்து திரையிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
Similar News
News April 1, 2025
மியான்மர் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு

மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2,719ஆக உயர்ந்துள்ளது. மேலும் 441 பேரை காணவில்லை. இதேபோல், 4,500க்கும் மேற்பட்டோர் காயத்துடன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.
News April 1, 2025
பங்குச்சந்தைகள் கடும் சரிவு

நிதியாண்டின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவினை கண்டிருக்கின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 354 புள்ளிகளையும் சென்செக்ஸ் 1390 புள்ளிகளையும் இழந்துள்ளது. கடந்த சில நாள்களாக மேல் நோக்கி சென்று கொண்டிருந்த பங்குச்சந்தை, இன்று சரிவடைந்திருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
News April 1, 2025
பலாத்காரம் செய்த பாதிரியார்… கோர்ட் அதிரடி தீர்ப்பு

பஞ்சாபில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மொஹாலி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தனது வித்தியாசமான அணுகுமுறையால் பிரபலமானவர் ‘இயேசு! இயேசு!’ பாதிரியார் பஜிந்தர் சிங். இவர் வெளிநாட்டு பயணத்துக்கு உதவுவதாக கூறி 2018-ல், அப்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்து, தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளார். இதுபோல பல பெண்களை இவர் வன்கொடுமை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.