News August 25, 2024
பயங்கரமானவன்தான் ஆனால் கண்ணியமானவன்

சிங்கங்களே பயப்படும் ஒரே மிருகம் கழுதைப் புலி தான். ஒரே கடியில் எலும்பை நொறுக்கும் தாடை வலிமை அதற்கு உண்டு. 4 கழுதைப் புலிகள், ஒரு சிங்கத்தையே கொன்றுவிடும். இவ்வளவு கொடூரமானவையாக இருந்தாலும் அவை மிகவும் கண்ணியமானவை. விலங்குகளிலேயே ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வது கழுதைப்புலிகள் தான். அதேபோல, தனது குடும்பத்தில் உள்ள பெண் கழுதைப் புலிகளிடம் ஆண் கழுதைப் புலிகள் இணை சேராது.
Similar News
News July 5, 2025
விசிக – காங்., இடையே வெடித்தது சண்டை..!

ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை, 2011-ம் ஆண்டை போல் விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு விசிகவின் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்., வலிமையாகவா இருக்கிறது என வினவிய அவர், விசிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால், திமுக கூட்டணிக்குள் சண்டை வெடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News July 5, 2025
தனிமையில் வாட வேண்டாமே…

போன் நோண்டவே டைம் பத்தாத இன்றைய இளம் ஜெனரேஷன், தனிமையில் தான் வாடுகின்றது. நேரடி பந்தபாசம் கிடைக்காமல் தனிமையில் தவிப்பதால், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் 100 பேர் இறப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கொஞ்சம் டைம் ஒதுக்கி நண்பர்களுடன் நேரில் சென்று பேசி சிரித்து மகிழுங்கள். வீட்டிலும் அன்பு பாராட்டுங்கள். ஸ்ட்ரெஸ்லாம் ஓடிப் போய்விடும். இதற்கு முதலில் போனை கொஞ்ச நேரம் தூரம் வையுங்க!
News July 5, 2025
பாமக தலைமை நிர்வாகக் குழு கலைப்பு!

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவைக் கலைத்து புதிய குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி, திலகபாமா, கே.பாலு, வெங்கடேஸ்வரன் தலைமையிலிருந்த தலைமைக் குழுவைக் கலைத்துவிட்டு, அன்புமணி, ஜி.கே.மணி, அருள், முரளி சங்கர், கரூர் பாஸ்கர், பரந்தாமன், தீரன், பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு யார் தலைவர் என்பதில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.