News August 18, 2024
மோசடி குறுஞ்செய்தி: மின் வாரியம் எச்சரிக்கை

நெல்லை மின்வாரியத்தினர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி குறைந்த பட்ச ரூ.3 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர். பதட்டப்படாமல், சைபர் குற்ற எண் 1930ல் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 5, 2025
நெல்லை: 10th போது அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு APPLY

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 5, 2025
நெல்லை: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு சிறை!

கடந்த 2024ம் ஆண்டு அம்பலவானபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது 77 என்பவர் 12 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுக்குறித்து அம்பை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பதிந்த போக்சோ வழக்கை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் இன்று விசாரித்து தமிழ்செல்வனுக்கு ஐந்து ஆண்டு சிறை 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News December 5, 2025
நெல்லை முக்கிய ரயில் சேவை நீட்டிப்பு

நெல்லையில் இருந்து டிசம்பா் 7ம் தேதி முதல் ஜனவரி 25-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும். நெல்லை – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து டிசம்பா் 8ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு ஒரு நாள் காலை 7:45க்கு நெல்லை வரும்.


