News October 13, 2025
கரூர் வழக்கில் SC தீர்ப்பு நியாயமானது: ADMK

கரூர் துயர வழக்கில் CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள SC, அதை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்நிலையில், இதனை வரவேற்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள SC உத்தரவை வரவேற்பதாக அதிமுகவின் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
திமுக மீதான சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்: நயினார்

கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க SC உத்தரவிட்டதற்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கரூர் விவகாரத்தில் திமுக அரசின் அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கும் எனவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News October 13, 2025
₹1,000 மகளிர் உரிமை தொகை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு பணியை TN அரசு தொடங்கியுள்ளது. வட்டாட்சியர்கள் தங்கள் பகுதியின் மனுக்களை பிரித்தளித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. நாள்தோறும் குறைந்தது 100 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து அதற்கான செயலியில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அதிகாரிகள் எந்த நேரத்திலும் ஆய்வுக்காக வீட்டிற்கு வரலாம். தயாராக இருங்க குடும்ப தலைவிகளே!
News October 13, 2025
கரூர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சீமான் எதிர்ப்பு

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது, TN காவல்துறையை அவமதிப்பது போல் உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் நடித்த ‘புலன் விசாரணை’ படம் வேணும்னா நல்லா இருக்கும், ஆனால் CBI விசாரணை நல்லா இருக்காது என்று சீமான் விமர்சித்துள்ளார். மாநில விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐ-க்கு வழக்கை மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள சீமான், சிபிஐ விசாரணையை ஏற்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.