News March 30, 2025
SC, ST இளைஞர்களுக்கு பொறியாளர் புத்தாக்க பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், 2022, 2023, 2024ஆம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பில் இளநிலை படிப்பு முடித்த 21 முதல் 25 வயது வரை உள்ள எஸ்.சி, எஸ்.டி இளைஞர்களுக்கு பொறியாளர் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியுடையவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Similar News
News April 2, 2025
சென்னையில் இன்றைய இரவு காவலர்கள் விவரம்

சென்னையில் இன்று (01.04.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 1, 2025
சென்னையில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூல்

சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இது முந்தைய நிதியாண்டைவிட ரூ.275 கோடி அதிகம்.
News April 1, 2025
உங்கள் குடும்பத்திற்கு வற்றாத செல்வம் தரும் சிறந்த தலம்

சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் உள்ளது. இங்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.