News December 5, 2024
எல்.முருகனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த SC

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக 2019ஆம் ஆண்டு அவர் பேசியிருந்தார். இதுதொடர்பாக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
Similar News
News November 3, 2025
சற்றுமுன்: தடாலடியாக குறைந்தது

ZEPTO தனது இலவச டெலிவரிக்கான குறைந்தபட்ச ஆர்டர் தொகையை தடாலடியாக குறைத்துள்ளது. முன்பு ₹199-க்கு மேல் ஆர்டர் செய்தால் மட்டுமே இலவச டெலிவரி வசதி இருந்தது. அதற்கு கீழ் நீங்கள் ஆர்டர் செய்தால், டெலிவரி கட்டணமாக ₹30 செலுத்த வேண்டும். தற்போது குறைந்தபட்ச ஆர்டர் தொகை பாதியாக ₹99 என குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல், இலவச டெலிவரிக்காக யாரும் எக்ஸ்ட்ராவா ஆர்டர் பண்ண வேண்டாம்.
News November 3, 2025
சத்து நிறைந்த 5 முளைகட்டிய பயிர்கள்

முளைகள் என்பவை விதைகளில் இருந்து முளைத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இளம்பயிர்கள். இதனை, வீடுகளில் எளிதில் பயிரிடலாம். உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் முளைகட்டிய பயிர்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த முளைகட்டிய பயிர்களை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 3, 2025
மீனவர்கள் மீதான அத்துமீறலை தடுங்கள்: செல்வப்பெருந்தகை

தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். எத்தனை முறை கூறினாலும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக கூறிய அவர், மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.


