News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும்.<> ஷேர் பண்ணுங்க<<>>

Similar News

News April 20, 2025

மே 15 வரை அவகாசம் – ஆட்சியர் எச்சரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 20, 2025

திகிலூட்டும் தொடர் கொள்ளை

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில், ஒரே நாளில் இரவு நேரத்தில் 8 வீடுகளின் பூட்டை உடைத்து ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசி பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News April 20, 2025

திருவண்ணாமலை மாவட்ட தாசில்தார் எண்கள்

image

▶️தாசில்தார், ஜவ்வாதுமலை – 9626457393
▶️தாசில்தார், கீழ்பென்னாத்தூர் – 7825873657
▶️தாசில்தார், வெம்பாக்கம் – 04182247272
▶️தாசில்தார், சேத்துப்பட்டு – 7708230676
▶️தாசில்தார், வந்தவாசி – 9445000514
▶️தாசில்தார், செய்யாறு – 9445000513
▶️தாசில்தார், ஆரணி – 9445000515
▶️தாசில்தார், போளூர் – 9445000517
▶️தாசில்தார், கலசபாக்கம் – 04181241050
▶️தாசில்தார், தண்ராம்பட்டு – 7825873656
ஷேர் பண்ணுங்க மக்களே

error: Content is protected !!