News August 2, 2024
முதல் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிடும் SBI

2024-25 நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நாளை வெளியிட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, ஒவ்வொரு நிதியாண்டிலும் 4 முறை அதன் நிதி முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் நாளை வெளியிடப்பட உள்ள முதல் காலாண்டு முடிவுகளை, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள், https://www.sbi.co.in/ என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
Similar News
News November 7, 2025
பிஹாரில் NDA -க்கு சாதகமான நிலை: விஷால் சூசகம்

பிஹார் தேர்தல் முடிவுகளை ஆவலோடு எதிர்பார்ப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் வலுவாக தெரிவதாகவும், அது பிஹாரின் எதிர்கால நலனுக்கு மிக முக்கியம் என்றும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். 60% மேல் வாக்குகள் பதிவாகியிருப்பது NDA-வுக்கு சாதகமான மனநிலையை காட்டுவதாக விஷால் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறந்த வேட்பாளர் வெற்றி பெறட்டும் என்று கூறியுள்ளார்.
News November 7, 2025
வணிக அரசியல் நடத்தும் திமுக: அன்புமணி

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு ₹20 லட்சம் வரை வைப்புத்தொகை செலுத்தும் வகையில் விதிகள் வகுப்பது ஏற்புடையதல்ல என்று அன்புமணி தெரிவித்துள்ளார். திமுக வணிக அரசியல் செய்வதாகவும், அதை போன்ற கட்சிகள் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி யோசனை கூறுவதாக அவர் சாடியுள்ளார். சேதத்திற்கு அபராதம் வசூலிக்க சட்டத்தில் இடம் உள்ளதால், வைப்புத்தொகை முன்மொழிவை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
News November 7, 2025
நவம்பர் 7: வரலாற்றில் இன்று

*1858-கல்வியாளர் பிபின் சந்திர பால் பிறந்தநாள். *1867–நோபல் பரிசு வென்ற மேரி கியூரின் பிறந்தநாள். *1888–நோபல் பரிசு வென்ற சி.வி.ராமன் பிறந்தநாள். *1969–நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள். *1975–இயக்குநர் வெங்கட் பிரபு பிறந்தநாள். *1993 – திருமுருக கிருபானந்த வாரியார் மறைந்த நாள். *2000 – அரசியல்வாதி சி.சுப்பிரமணியம் மறைந்த நாள்.


