News April 3, 2024
வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI மறுப்பு

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக SBI துணைப் பொது மேலாளர் எம்.கண்ணா பாபு கூறிய போது, “இந்தத் தகவலை வெளியிடுவது 3ஆம் தரப்பினரின் போட்டி நிலைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆா்டிஐ சட்டப் பிரிவு 8(1) (D)-இன் கீழ் பொது வெளியில் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Similar News
News August 18, 2025
ஆகஸ்ட் 18: வரலாற்றில் இன்று

1945 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம்.
1954 – தமிழக அரசியல்வாதி வி.கே.சசிகலா பிறந்ததினம்.
1928 – சென்னை மியூசிக் அகடாமி துவக்கமானது.
1227 – மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கான் மறைந்த தினம்.
1920 – அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் அதிகாரப்பூர்வமானது.
News August 18, 2025
வீண் செலவுகளுக்கு தமிழகம் முதலிடம்: அன்புமணி

மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளை செய்வதில் பின்தங்கியுள்ள தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் முதலிடத்தில் இருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனம் உருவாக்குவதற்காக ₹4,155.74 கோடி மட்டுமே செலவிட்டிருப்பதாகவும், இது கடந்த நிதியாண்டைவிட 17.57% குறைவு என்றும் தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களில் இது உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
தடகள வீரர் ஜெசி ஓவன்ஸ் பொன்மொழிகள்

*நம் அனைவருக்கும் கனவுகள் இருக்கும். ஆனால் கனவுகளை நனவாக்க, மிகுந்த உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, சுய ஒழுக்கம் மற்றும் முயற்சி தேவை.
*விளையாட்டுத்துறையில் பிறக்கும் நட்புகள் தான் போட்டியின் உண்மையான தங்கம். விருதுகள் அரிக்கப்பட்டுவிடும், நண்பர்கள் தூசியை சேகரிப்பதில்லை.
* மனிதர்களுக்கு இடையேயான மதிப்புள்ள ஒரே பிணைப்பு அவர்களின் மனிதாபிமானம் மட்டுமே.