News April 14, 2025

லோன் வாங்குபவர்கள் ஹேப்பி: வட்டியை குறைத்தது SBI

image

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதையடுத்து பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் <<16065106>>கடன்கள் <<>>மீதான வட்டியை குறைத்து வருகின்றன. அந்த வரிசையில், SBI வங்கியும் தான் வழங்கும் கடன்களுக்கான வட்டியை ஏப்.15 முதல் 25 புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் லோன் வாங்குபவர்கள் பயனடைவர். அதேநேரம், டெபாசிட்டுக்கு வழங்கும் வட்டியையும் 10-25 புள்ளி SBI குறைத்துள்ளது.

Similar News

News January 7, 2026

தமிழகத்தில் 12-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: IMD

image

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலையில், இன்று காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனிடையே குமரிக்கடல், அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 12-ம் தேதிவரை கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உள்தமிழகத்தில் லேசான பனிமூட்டம் நிலவுமாம்.

News January 7, 2026

‘ஜனநாயகன்’ சிக்கலுக்கு பாஜக காரணமா? தமிழிசை

image

‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழிசை விளக்கம் அளித்தார். சென்சார் சொன்ன திருத்தங்களை படக்குழு செய்யாததால் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார். மேலும் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என்பதை நம்பவில்லை என்றும் நடிகர்கள் அரசியலில் சாதிக்கவில்லையென்றால் மீண்டும் நடிக்க சென்றுவிடுவார்கள் எனவும் விமர்சித்தார்.

News January 7, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 7, மார்கழி 23 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்:9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்:7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

error: Content is protected !!