News September 3, 2025
SBI வாடிக்கையாளர்களுக்கு வந்தது எச்சரிக்கை

SBI வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Whatsapp-ல் உங்களின் YONO கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக போலியான APP லிங்கை அனுப்புகின்றனர். அதனை கிளிக் செய்தால் பணம் திருடப்படுகிறது. எனவே, SBI வங்கி வாடிக்கையாளர்கள், internet மொபைல் பேங்கிங் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது *சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் *எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
News March 7, 2026
பொதுமக்களை ஈரான் தாக்குகிறது: USA

USA, ஈஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், 12-க்கும் அதிகமான நாடுகளில் வாழும் பொதுமக்களை ஈரான் திட்டமிட்டே தாக்குவதாக USA குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரானின் பயங்கரவாத படைகள் செய்யும் அட்டூழியத்தை ஏற்க முடியாது என்றும், இந்த தாக்குதல்களுக்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்வார்கள் எனவும் USA கூறியுள்ளது.
News March 7, 2026
SPORTS 360°: பேட்மிண்டனில் லக்ஷயா சென் அபாரம்

*ISL கால்பந்தில் ஜாம்ஷெட்பூர் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது *மோகன் பகன் சூப்பர் ஜெயண்ட் 5-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது *PRAGUE செஸ் மாஸ்டர்ஸில் அரவிந்த் சிதம்பரம் 3-வது இடம் பிடித்தார் *வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில், லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்


