News April 13, 2024
SBI கஸ்டமர்ஸ் செல்போன் எண்ணை ஈஸியாக மாற்றலாம்

வாடிக்கையாளர்களுக்காக SBI பல வசதிகளை செய்கிறது. அந்த வகையில், வங்கிக் கணக்குடன் இணைத்துள்ள செல்போன் எண்ணை மாற்றும் வழி சுலபமாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், ATM இயந்திரத்தில், தங்களது டெபிட் கார்டை செலுத்தி Registration என்ற கமெண்டை கிளிக் செய்தால் Mobile Number Registration என்ற ஆப்ஷன் வரும். அதில் Change Mobile Number என்ற ஆப்ஷன் மூலம் பழைய எண்ணுக்கு பதில் புதிய செல்போன் எண்ணை மாற்றலாம்.
Similar News
News October 25, 2025
ரஜினி – கமல் படத்தை இயக்கும் நெல்சன்

பல ஆண்டுகளுக்கு பின் கமல், ரஜினி ஒரே படத்தில் இணைவதால் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அதை யார் இயக்கப்போகிறார் என்பது கேள்விக்குரியாகவே இருக்கிறது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் படத்தை நெல்சன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் -2 செட்டில் ரஜினியிடம் கதை சொல்லி நெல்சன் ஒகே பெற்றதாக கூறப்படுகிறது.
News October 25, 2025
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விநோத முடிவு

டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத்துக்கு நிர்வாக அமைப்பில் பொறுப்பு கொடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விநோதமாக செயல்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் வீரர்கள் விவகாரங்களுக்கான ஆலோசகராக ஷான் மசூத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வட்டாரத்தில் கேப்டனுக்கு நிர்வாக பொறுப்பு கொடுப்பது இதே முதல்முறை என சொல்லப்படுகிறது.
News October 25, 2025
வங்கிக் கணக்கில் ₹2000… முக்கிய அறிவிப்பு

விவசாயிகளுக்கான PM கிசான் திட்ட 21-வது தவணை ₹2000, அடுத்த ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முறைகேடாக உதவித்தொகை பெற்றுவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டோர், 18 வயது நிறைவடையாதவர்கள், நில உரிமையை உறுதிப்படுத்தாதவர்கள் என சுமார் 41 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் பெயரை <


