News March 24, 2024

கட்டணத்தை உயர்த்தியது SBI வங்கி

image

SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, மற்ற வங்கியின் ATMகளில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். SBI வங்கி ATMகளில் 5 முறை இலவசமாக எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ATMகளை பயன்படுத்தினால் ₹20 + GST கட்டணமும், SBI ATMகளுக்கு ₹10 + GST கட்டணமும் வசூலிக்கப்படும். வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் போனால் ₹20 + GST கட்டணம் வசூலிக்கப்படும்.

Similar News

News April 20, 2025

வரலாற்றில் இன்று!

image

➤ 1889 – சர்வாதிகாரியாக வரலாற்றில் அறியப்படும் ஹிட்லர் பிறந்த நாள். ➤ 1950 – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிறந்த நாள். ➤ 1972 – யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது. ➤ 2012 – பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டு 127 பேர் உயிரிழப்பு. ➤ 2013 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 150-க்கும் மேற்பட்டோர் பலி.

News April 20, 2025

தேர்தலுக்கு மட்டுமே பாஜக கூட்டணி: SP வேலுமணி

image

2026-ல் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் என அக்கட்சியின் மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இருப்பது தேர்தலுக்கான கூட்டணி எனத் தெரிவித்த அவர், வக்ஃப் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்து இருப்பதாகக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

News April 20, 2025

சே குவேராவின் தன்னம்பிக்கை வரிகள்!

image

▶ விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையெனில் உரம். ▶ எங்கெல்லாம் அடக்கப்படுபவர்களின் குரல் கேட்கிறதோ? அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். ▶ புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும். ▶ அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். ▶ சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை.

error: Content is protected !!