News August 8, 2024
SBI வங்கியில் 1,040 வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் காலியாக உள்ள 1,040 சிறப்பு கேடர் அதிகாரிகள் (SCO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆக. 8) கடைசி நாளாகும். இதன்கீழ், சென்ட்ரல் ரிசர்ச் குழு, ரிலேஷன்ஷிப் மேனேஜர், இன்வெஸ்ட்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விருப்பம் உள்ளோர், SBI வங்கியின் sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News October 22, 2025
அதி கனமழை எனக் கணக்கிடுவது எப்படி?

வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், மழைப்பதிவு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம். *24 மணி நேரத்தில் 21 செ.மீ-க்கு மேல் மழை பதிவானால் அது, அதி கனமழை. *12 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை பெய்தால் மிக கனமழை. *7 செ.மீ., முதல் 11 செ.மீ., வரை பெய்தால் கனமழை. *2 செ.மீ., முதல் 6 செ.மீ., வரை பெய்தால் மிதமான மழை என வானிலை ஆய்வு மையம் கணக்கிடுகிறது.
News October 22, 2025
கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. இந்நிலையில், மாநில கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். மழை நிலவரம், பாதிப்புகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப் படையினரை வேகமாக செயல்படவும் உதயநிதி அறிவுறுத்தினார்.
News October 22, 2025
இஸ்லாமின் அரசியல் கவனிக்கப்படவில்லை: யோகி

இந்தியாவில் சனாதன தர்மத்தை அழிக்க (அ) மட்டுப்படுத்த இஸ்லாம் நினைத்தது என்று உ.பி., CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதற்கு எதிராகவே சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட பேரரசர்கள் போராடி சனாதன தர்மத்தை நிலைநிறுத்தினர் என்றார். ஆனால், பிரிட்டிஷ் காலனித்துவம் பற்றிய வரலாற்றை படிக்கும் நாம், இஸ்லாமின் இதுபோன்ற அரசியலையும் அறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.