News February 9, 2026

SBI லாபம் 13.06% அதிகரிப்பு

image

SBI வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபம் 24.5% உயர்ந்து ₹21,028 கோடியை ஈட்டியுள்ளது. மொத்த வருவாயில் 9.7% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒருங்கிணைந்த கணக்குகளின்படி, நிகர லாபம் ₹21,317 கோடியாக பதிவாகியுள்ளது. நிகர வட்டி வருமானம் ₹41,446 கோடியிலிருந்து ₹45,190 கோடியாக 9.4% அதிகரித்துள்ளதாக வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 26, 2026

வெற்றியல்ல.. மாபெரும் வெற்றி தேவை!

image

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய மேட்சில், இந்தியாவிற்கு வெற்றி அல்ல, மிகப்பெரிய வெற்றி தேவைப்படுகிறது. அதாவது முதலில் இந்தியா பேட்டிங் செய்தால், 77 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 2-வது பேட்டிங் செய்தால், 181 ரன்களை ஜிம்பாப்வே அடித்தாலும், அதை 12.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் ரன் ரேட் அடிப்படையில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும். சோதனையை வென்று முன்னேறுமா இந்தியா?

News February 26, 2026

சம்பளம் மேலும் ₹5,000 உயர்ந்தது.. அமைச்சர் அறிவிப்பு

image

கல்லூரி கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை மேலும் ₹5,000 உயர்த்தி அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதன்படி, கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ₹25,000 – ₹30,000 ஆகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ₹20,000 – ₹25,000 ஆகவும் ஊதியம் உயர்ந்துள்ளது. இந்த ஊதிய உயர்வு மார்ச் 1 முதல் அமலாகிறது. இதன் மூலம் 9,646 விரிவுரையாளர்கள் பயனடைவர்.

News February 26, 2026

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு..

image

ரேஷன் கடைகளில் பிப்.28-க்குள் e-KYC சரிபார்ப்பை முடிக்கவில்லையென்றால், மார்ச் முதல் ரேஷன் அட்டைகள் செயல்படாமல் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, உடனடியாக அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று e-KYC சரிபார்ப்பை உடனடியாக முடிக்க வேண்டும். மேலும், குடும்பத்தினர் யாரும் வருமான வரி செலுத்தினாலோ (அ) 4 சக்கர வாகனம் வைத்திருந்தாலோ ஏப்.1 முதல் அவர்களது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். SHARE

error: Content is protected !!