News February 28, 2025
SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும்.<
Similar News
News April 21, 2025
திருவண்ணாமலையில் புதிய மினி டைடல் பூங்கா

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கபட உள்ளது. ஓராண்டில் இதன் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் புதிய மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்திருந்தார். இதன்மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
News April 21, 2025
முன்னாள் ஊராட்சித் தலைவர் பைக் மோதி பலி

திருவண்ணாமலையை அடுத்த இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(58). முன்னாள் ஊராட்சித் தலைவர். இவர், நேற்று இரவு தண்டரை கிராமத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். இசுக்கழி காட்டேரி கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக், பழனி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெறையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2025
மே 15 வரை அவகாசம் – ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.