News December 7, 2024
மந்திரத்தை சொல்லு, இல்லனா செருப்பால அடிப்பேன்

மத நம்பிக்கை மனதில் இருக்கலாமே தவிர, பிறரிடம் திணிப்பதை எவ்வாறு ஏற்பது. ம.பி.யில் சிறுவன்(16) ஒருவன் 6,9,11 வயதுடைய 3 குழந்தைகளை மந்திரம் சொல்லுங்கள் என நிர்பந்தித்து செருப்பால் அடித்துள்ளான். தகாத வார்த்தையாலும் திட்டி, உறவினர்களின் தொலைபேசி எண்களை கேட்டும் மிரட்டியுள்ளார். இது குறித்து அச்சிறுவன் மீதும், வீடியோ எடுத்த சிறுவன்(14) மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னவென்று சொல்வது…
Similar News
News March 20, 2026
அமித்ஷாவின் இல்லத்தில் EPS

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக அமித்ஷாவை அவரது இல்லத்தில் EPS சந்தித்துள்ளார். இச்சந்திப்பில், NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, NDA கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட்களை ஒதுக்க EPS முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.
News March 19, 2026
58 ஆபாச வீடியோக்கள் சிக்கின.. ஜோதிடரின் லீலை!

Epstein Files போன்ற சம்பவம் மகாராஷ்டிராவிலும் அரங்கேறியுள்ளது. அசோக் காரத் என்ற ஜோதிடர் பெண்களுக்கு போதைப் பொருள் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதை வீடியோவாக எடுத்து பாலியல் ரீதியாக அவர்களை தொடர்ந்து சுரண்டியுள்ளார். Ex கடற்படை வீரரான அவரிடம் இருந்து 58 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவருக்கு அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
News March 19, 2026
விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு நாளை முதல் 3 நாள்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி (அ) இணையதளம் மூலம் இப்போதே டிக்கெட் புக் செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள். SHARE IT


