News April 11, 2024

ஊழலுக்கு குட்பை சொல்லுங்கள்

image

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மூலம் ஊழலுக்கு மக்கள் குட்பை சொல்ல வேண்டுமென பாஜக தலைவர் ஜேபி நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். சிக்கிமில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சிக்கிமுக்கு வளர்ச்சி, அமைதி, உள்கட்டமைப்பு வசதி, வளர்ச்சியை பாஜக அரசு கொடுக்கும் என்றும், ஆதலால் தேர்தலில் ஊழலுக்கு குட் பை சொல்லிவிட்டு, தாமரையை மலர விட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

Similar News

News February 1, 2026

U19 WC: இந்தியா நிதான ஆட்டம்!

image

பாகிஸ்தானுக்கு எதிரான U19 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. தற்போது வரை இந்திய அணி 3 ஓவர்களில் 24 ரன்களை எடுத்துள்ளது. ஆரோன் ஜார்ஜ் 10 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 13 ரன்களும் அடித்துள்ளனர்.

News February 1, 2026

போண்டா சாப்பிட்டபோது மரணம்.. அதிர்ச்சி

image

ஹைதராபாத்தில் போண்டா சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டையில் போண்டா சிக்கியதில் மூச்சு விட முடியாமல் அவரது உயிர் பிரிந்துள்ளது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாம் சாப்பிடும் பொருள்களின் தன்மையை அறிந்து (நீர் ஆகாரங்கள், திட பொருள்கள்) அதற்கேற்ப சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News February 1, 2026

பட்ஜெட்: புற்றுநோய் மருந்துகளுக்கு வரி இல்லை

image

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலும் நீக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல் 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்களுக்கு முற்றிலும் வரி நீக்கம் செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!