News February 25, 2025
₹500 கோடி வசூலித்த ‘சாவா’

‘சாவா’ திரைப்படம் உலகளவில் ₹500 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில், விக்கி கெளஷல்-ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸான இந்தப் படம், இந்தியாவில் மட்டும் ₹420 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Similar News
News February 26, 2025
மாநில உரிமையில் ஒன்று சேர வேண்டும்: சீமான்

அனைத்து கட்சி கூட்டம் தொடர்பான கேள்விக்கு, ‘மாநில உரிமை என்று வரும்போது எல்லோரும் சேர்ந்து நின்றுதான் ஆக வேண்டும்’ என சீமான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும், தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் ஒருமித்த குரலாக எதிர்க்க வேண்டும் எனக்கூறிய அவர், சீர்த்திருத்தம் என்ற பெயரில் சீரழிப்பதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
News February 26, 2025
ஏசி காற்றால் ஏற்படும் தீமைகள்

* ஏசி ரூமில் இருப்போரது உடலில் நீர் குறையும்
* ஏசி காற்று நேரடியாக உங்கள் தலையிலோ, முகத்திலோ பட்டால் தலைவலி ஏற்படலாம்
* ஏசியை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்
* ஏசியின் குளிர்க்காற்று தசைகளை இறுகச்செய்து செயல்பட விடாது
* ஏசியின் அதிக குளிர் உங்களது உடல் சூட்டை குறைத்து தூங்க விடாமல் செய்யலாம்
* ஏசியால் உங்களது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து ஜலதோஷம் உள்ளிட்டவை ஏற்படலாம்
News February 26, 2025
2000 இந்தியர்கள் பலி… கண்ணீர் அஞ்சலி

பிப்.25, 1944-ம் ஆண்டு. 2-ம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது ஜப்பானிய கப்பல்களான ‘ரியுசெய்’ ‘டேங்கோ மாரு’ இரண்டும் இந்தோனேஷியா அருகே சென்று கொண்டிருந்தபோது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் பயங்கர தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அந்த கப்பல்களில் இருந்த 2000-க்கு மேற்பட்ட இந்தியர்கள் உள்பட 8000 பேர் பலியானார்கள். வரலாற்றில் மறக்கப்பட்ட மிகப் பயங்கரமான அழிவில் பலியான நம் சகோதரர்களை நினைவுகூர்வோம்.