News April 22, 2025
19 ஆண்டுகளாக தூங்கும் சவுதி இளவரசர்!

சவுதி இளவரசர் அல்-வலீத் பின் காலித், 36 வயதை எட்டியுள்ளார். 19 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதால், அவர் ‘தூங்கும் இளவரசர்’ என்று அழைக்கப்படுகிறார். 2005-ல் நடந்த விபத்தில் மூளையில் காயம் ஏற்படவே, சுயநினைவை இழந்தார். வெண்டிலேட்டர் துணையுடன், டாக்டர்களின் முழுநேர கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறார். 2019-ல், அவரது கை விரல்களும், தலையும் லேசாக அசைந்தன. அதையடுத்து எந்த முன்னேற்றமும் இல்லை.
Similar News
News April 23, 2025
மறைந்த பின் போப் ஆண்டவரின் முதல் PHOTO

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) நேற்று காலமானார். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மறைவுக்குப் பிறகு முதல்முறையாக அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த போட்டோவை பதிவிட்டு, அமைதியை விரும்பி மாமனிதரே, அமைதியாக உறங்குங்கள் என்று பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News April 23, 2025
IPL: கே.எல். ராகுல் படைத்த தரமான சாதனை..!

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற டேவிட் வார்னரின் சாதனை டெல்லி வீரர் கே.எல். ராகுல் தவிடுபொடியாக்கியுள்ளார். 130 இன்னிங்சில் விளையாடிய அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, டேவிட் வார்னர் (135), விராட் கோலி (157), ஏபி டிவில்லியர்ஸ் (161), ஷிகர் தவான் (168) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்த சாதனையை யார் முறியடிப்பார் என நினைக்கிறீர்கள்?
News April 23, 2025
தோசை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

கேரளாவில் மசால் தோசை சாப்பிட்ட 3 வயது சிறுமி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஹென்றி என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 19-ம் தேதி, அங்கமாலியில் உள்ள உணவகத்தில் மசால் தோசை சாப்பிட்டுள்ளார். வீடு திரும்பிய உடன் உடல்நலக் குறைவு ஏற்படவே, அனைவரும் ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒலிவியா (3) உயிரிழந்தார். இதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.