News August 20, 2025

சவுதியின் நவீன வான்வெளி மைதானம்!

image

2034 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக சவுதி அரேபியா ஒரு புதுமையான மைதானத்தை உருவாக்க உள்ளது. அந்நாட்டின் The Line ஸ்மார்ட் சிட்டியில், பாலைவனத்தில் இருந்து 350 உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் மைதானம் கட்டப்பட உள்ளது. 46,000 பேர் அமரும் வகையில், $1 பில்லியன் மதிப்பில் அந்த வான்வெளி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் 2027-ல் தொடங்கப்பட்டு 2032-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News August 21, 2025

மசோதாவை வாசிக்க கூட நேரம் தருவதில்லை: கனிமொழி

image

PM, CM குற்றம் புரிந்தால் பதவிநீக்கம் செய்வதற்கான மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதுபற்றி பேசிய கனிமொழி, எதிர்க்கட்சிகளுக்கு மசோதாக்களை வாசிக்கக்கூட கால அவகாசம் தராமல், கூட்டத்தொடரின் கடைசி நாளில் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யும் பழக்கத்தை மத்திய அரசு வழக்கமாக செய்வதாக குற்றம் சுமத்தினார். ஜனநாயகத்தை சீர்குலைக்க குறிக்கோளோடு மத்திய அரசு செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

News August 21, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 21 – ஆவணி 5 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 12:00 AM – 1:00 AM ▶ கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: திதித்துவம் ▶ சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.

News August 21, 2025

கர்நாடகாவை போல் TN அரசு செயல்படவில்லை: அன்புமணி

image

சமூகநீதியை CM ஸ்டாலின் குழித்தோண்டி புதைப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 183 நாள்களில் சாத்தியமானதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா அரசு காட்டிய வேகத்தை வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் TN அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் காட்டவில்லை என அன்புமணி குற்றம்சுமத்தியுள்ளார்.

error: Content is protected !!