News April 7, 2025
இந்தியாவுக்கு விசா வழங்க சவுதி தடை: காரணம் என்ன?

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு உம்ரா மற்றும் பிசினஸ் விசாக்கள் வழங்குவதை சவுதி தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த விசாவில் வருபவர்கள் அப்படியே சட்டவிரோதமாக தங்கிவிட்டு ஹஜ் யாத்திரையையும் முடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதாக சவுதி அரசு கருதுகிறது. இதை தவிர்க்கவே ஜூன் மாதம் வரை விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
Similar News
News April 7, 2025
GBU திரைப்படத்திற்கு U/A சான்று

அஜித்குமார், திரிஷா நடிப்பில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் ‘Good, Bad, Ugly’ படத்திற்கு U/A சான்று வழங்கியிருக்கிறது தணிக்கை வாரியம். மொத்தம் 140 நிமிடங்கள் 15 நொடிகள் கொண்ட இப்படத்தை 139 நிமிடங்கள் 52 நொடிகளாக குறைக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளது. மேலும், 1 நிமிடம் 41 நொடிகளுக்கான காட்சியை மாற்றவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இறுதியில் U/A சான்றுடன் படம் வெளியாகவுள்ளது.
News April 7, 2025
தேச ஒற்றுமைக்கு குந்தகம்.. சட்டம் சொல்வதென்ன?

தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இந்த செயல்களில் ஈடுபடுவோருக்கு என்ன தண்டனை அளிக்கப்படும் என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் 152ஆவது பிரிவில், தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்போருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படும் அல்லது அபராதத்துடன் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
News April 7, 2025
பிரபல கால்பந்து வீரர் மரணம்

கொலம்பியாவின் கால்பந்து ஜாம்பவானும், பயிற்சியாளருமான ஜோர்கெ பொலானோ (47) காலமானார். நல்ல பிட்னெஸுடன் இருந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கொலம்பியா கால்பந்தை உலக தரத்துக்கு உயர்த்தியவர்களில் ஒருவரான இவர் 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தார். கோபா இத்தாலியா கோப்பையையும் வென்றிருக்கிறார். இவரின் மறைவுக்கு கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.