News March 27, 2025
சனிப்பெயர்ச்சி: குபேரன் ஆகப்போகும் ராசிகள்

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, வரும் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நாளில், சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியால், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய மூன்று ராசியினருக்கு குபேர யோகம் அடிக்கப் போகிறது. இவர்களின் பணப் பிரச்னைகள் அனைத்தும் இந்த சனிப்பெயர்ச்சியோடு தீரும் என்று ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Similar News
News December 1, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் மாதம் தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை வாரந்தோறும் சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 28 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் (நவ.30) தெரிவித்துள்ளார். இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான UDID அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
ஹீரோ ரோல் போர் அடித்து விட்டது: மம்முட்டி

பல டாப் ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் சரி, ஹீரோவாகவே நடிப்பர். ஆனால் மம்முட்டி சமீபமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். ‘களம் காவல்’ படத்தில் வில்லனாக நடிக்கும் அவர், ‘ஹீரோவாக நடிப்பதில் உற்சாகமில்லை, சீனியர், வில்லன் பாத்திரங்களில் தான் நடிப்பு திறமையை காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். ஸ்டார் இமேஜை விட நடிகராக இருப்பதே பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 1, 2025
BREAKING: 10 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

டிட்வா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.


