News March 1, 2025
சனிப் பெயர்ச்சி: ஏழரை சனியில் சிக்கப்போகும் ராசிகள்

2025 சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியில் சிக்கப் போகும் ராசிகள், மீளப் போகும் ராசிகள் குறித்து ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதை பார்க்கலாம். *மீன ராசி – ஜென்ம சனி (சனியின் உக்கிரமான பகுதி) *கும்ப ராசி – பாத சனி (சனியின் கடைசி பகுதி) *மேஷ ராசி – விரய சனி (ஏழரை சனி தொடக்கம்) *சிம்ம ராசி – அஷ்டம சனி *மகர ராசி – ஏழரை சனியிலிருந்து விடுபடல் *கடக ராசி – அஷ்டம சனியிலிருந்து விடுபடல்.
Similar News
News March 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 2, 2025
8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி – மின்னலுடன் மழை

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக முன்னறிவித்துள்ளது. இதேபோல், நெல்லை, தேனி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் IMD குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
News March 2, 2025
சாம்பியன்ஸ் டிராஃபி Final மேட்ச் இப்படிதான் இருக்குமா?

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் அரையிறுதியில், IND, AUS, NZ, SA மல்லுக்கட்ட போகின்றன. 4 அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. எனினும் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் வலுவாக உள்ளது. அதேபோல் மற்ற அணிகளும் வலுவாக இருந்தாலும் AUS, SA-ஐ வெளியேற்றிவிட்டு, இறுதிப்போட்டியில் IND vs NZ இடையேதான் மோதல் இருக்கும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.