News March 29, 2025
சனிப்பெயர்ச்சி: இன்று இரவு இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

சனிப்பெயர்ச்சியான இன்று இரவு 9.44 மணிக்கு சனீஸ்வர பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதத்தில் இருந்து மீனத்தில் உள்ள பூரட்டாதி 4ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜாக்பாட் அடிக்கும் ராசிகளில் துலாம் முதலிடத்தில் உள்ளது. சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகர ராசிக்கார்களுக்கு ஆரோக்கியம் மேம்படும், பணப்புழக்கம் அதிகரிக்கும், வெற்றி உண்டாகும்.
Similar News
News January 8, 2026
தணிக்கை குழுவினர் மோசமானவர்கள் அல்ல: சுதா

தணிக்கை பிரச்னையில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், சென்சார் போர்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், தணிக்கை குழுவினர் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை என ‘பராசக்தி’ இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ‘பராசக்தி’ படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது, அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயமானவை என்றும், படத்தை அவர்கள் ரசித்ததாகவும் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
அதிமுகவில் OPS இல்லை.. இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி

அதிமுகவில் OPS, சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பேசியபின், EPS தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரம், அதிமுக கூட்டணியில் TTV தினகரன் இடம் பெறுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத அவர், சில கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதாக கூறியுள்ளார். இதனால், NDA கூட்டணியில் TTV-யை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
News January 8, 2026
அந்த 3 State-ல பிறக்கலனா.. இந்திய அணியில் கஷ்டம்!

NZ தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், ராபின் உத்தப்பாவின் பேட்டி ரசிகர்களிடம் பேசும் பொருளாகியுள்ளது. இந்திய அணியில் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமான செயல் என குறிப்பிட்ட அவர், மும்பை, டெல்லி, பஞ்சாப் ஆகிய 3 இடங்களில் இருந்து வராமல் போனால், வீரர்கள் கூடுதலாக போராட வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?


