News March 29, 2025
சனிப்பெயர்ச்சி: நற்பலன்கள் பெற பொதுவான பரிகாரங்கள்

சனிப்பெயர்ச்சி பரிகாரம்: *தினசரி விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும். *விநாயகர் அகவல், ஹனுமான் சாலீசா, சுந்தரகாண்டம் பாராயணம் ஆகியவற்றை தினமும் மேற்கொள்ளலாம். *அவ்வப்போது கணபதி ஹோமம் (அ) பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்யலாம். *தினமும் முன்னோர்கள் வழிபாடு செய்வது (குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது). *தினமும் காகத்திற்கு சாதம் வைப்பதும் சிறந்த பரிகாரமாகும் என்கின்றனர் நம்பிக்கையுள்ளோர்.
Similar News
News January 19, 2026
மதுரை: பொங்கல் பண்டிகை 500 க்கும் மேற்பட்டோர் கைது

தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், ஆபரேஷன் டிராக் நெட் மூலம் 1,100 பிணையில் வரமுடியாத பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டன. மதுரை மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 90 வாரண்டுகள் செயல்படுத்தப்பட்டன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஜனவரி 9 முதல் 16 வரை 598 பேர் கைது செய்யப்பட்டனர்.
News January 19, 2026
பராசக்தி படம் பார்த்தபின் சீமான் வேண்டுகோள்!

பராசக்தி படம் தான் நம் மொழிப்போராட்ட வரலாறு என ஒப்பிட்டு பேசாதீர்கள் என சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையான மொழி போராட்டத்தை எடுத்தால், அப்படம் ரிலீஸே ஆகாது என்றும், அந்த ஜன நாயகம் நம் நாட்டில் இல்லை. ஜன நாயகன் படும்பாடே அதற்கு உதாரணம் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வாவின் பங்களிப்பும், GV பிரகாஷின் பின்னணி இசையும் நேர்த்தியாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.
News January 19, 2026
பாஜக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்? தமிழிசை

தமிழுக்கு எதிரான கட்சி என விமர்சிப்பவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜக <<18891828>>தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு <<>>தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அடித்தட்டு மக்களுக்கு முழுமையான வளர்ச்சியை வழங்கும் விதமாகவும், கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற கூடியதாகவும் பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


