News August 25, 2024
நீதிக்காக காத்திருக்கும் சதீஷ்

‘சட்டம் என் கையில்’ திரைப்படம் செப்.20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தை தொடர்ந்து, சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, த்ரில்லர் ஜானரில் சச்சி இயக்கியுள்ளார். கையில் Gun உடன் சதீஷ் அமர்ந்திருக்கும் மிரட்டலான போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. காமெடியன்கள் கதாநாயகர்களாக மாறி வரும் தற்போதைய ட்ரெண்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
Similar News
News October 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 27, ஐப்பசி 9 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News October 27, 2025
வக்ஃபு சட்டம் குப்பையில் வீசப்படும்: தேஜஸ்வி யாதவ்

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் குப்பையில் கிழித்து எறியப்படும் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பிஹார் தேர்தலுக்கான பரப்புரையில் பேசிய அவர், அம்மாநில CM நிதிஷ்குமார் மதவாத சக்திகளுடன் கைகோர்ப்பதால் மாநிலத்தில் வெறுப்பு பரவுகிறது என்றும் விமர்சித்தார். வக்ஃபு குறித்த தேஜஸ்வியின் ஆவேச பேச்சு தற்போது பிஹார் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News October 27, 2025
RO-KO பார்ட்னர்ஷிப்.. ரோஹித் நெகிழ்ச்சி

ஆஸி.,க்கு எதிரான ODI தொடருக்கு தயாராவதற்கு தன்னிடம் நிறைய நேரம் இருந்ததாக ரோஹித் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அது தனக்கு தற்போது உதவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நீண்ட நாள்களுக்கு பிறகு கோலியுடன் 100+ பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பாக இருந்ததாகவும், இணைந்து பேட்டிங் செய்வது இருவருக்குமே மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


