News March 13, 2025
பாஜகவில் இணைந்த சதீஷ் சிவலிங்கம்

பிரபல பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காமன்வெல்த் போட்டிகள் & காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த இவர், அர்ஜுனா விருதையும் பெற்றவர். வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான இவரை, வரும் சட்டமன்றத் தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என தெரிகிறது.
Similar News
News March 13, 2025
திமுகவில் முறைவாசல் செய்பவர் ரகுபதி – ஜெயக்குமார்

நீட் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டிய இபிஎஸ், தன்னுடன் விவாதிக்க முதல்வருக்கு திராணி இருக்கிறதா என வினவி இருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, இபிஎஸ் உடன் ஒரே மேடையில் விவாதிக்க தான் தயார் என தெரிவித்தார். இதுபற்றி பேசிய அதிமுகவின் ஜெயக்குமார், ‘திமுகவில் முறைவாசல் செய்து வருபவர் ரகுபதி, அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை’ என காட்டமாக கூறியுள்ளார்.
News March 13, 2025
WARNING: மக்களே, இத மட்டும் செய்யாதீங்க

இந்தப் பழக்கங்கள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும்: *இரவு நீண்டநேரம் தூங்காமல் இருத்தல் *அதிகம் காபி அருந்துதல் *அடிக்கடி தலைவலி, வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளுதல் *மது அருந்துதல் *துரித & பாக்கெட் உணவுகள் எடுத்தல் *விட்டமின் B6, மக்னீசியம் குறைபாடு *உணவில் அதிகம் சர்க்கரை, உப்பு சேர்த்தல் *சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அடக்குதல் *போதுமான தண்ணீர் அருந்தாமல் இருத்தல். SHARE IT.
News March 13, 2025
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு: ED

TASMAC தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் மார்ச் 6ம் தேதி நடத்திய சோதனை தொடர்பாக ED விளக்கம் அளித்துள்ளது. அதில், சோதனையில் ரூ.1,000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த ED, TASMAC உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.