News May 14, 2024
சத்யராஜின் வெப்பன் திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ்

நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் பிள்ளை, நடிகை தான்யா ஹோப் உள்ளிட்டோர் வெப்பன் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைகளத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியான நிலையில், படம் இந்த மாத இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Similar News
News March 23, 2026
அரியலூர்: நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

வெட்டியார்வெட்டு கிராமத்தில் உள்ள சோழன் குளம் ஏரியில் தருண் என்ற 9 வயது சிறுவன் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல்லில் நாளை மறுநாள் கோலாகல துவக்கம்!

நாமக்கல் நரசிம்ம சாமி கோவில் தேர் திருவிழா நாளைமறுநாள் (மார்ச் 25) கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், வரும் ஏப். 2ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் நரசிம்ம சாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.