News March 27, 2025

சசிகுமார் எடுத்துள்ள புதிய அவதாரம்

image

சுப்பிரமணியபுரத்தில் நடிகராகவும் இயக்குநராகவும் களமிறங்கிய சசிகுமார், தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர். தற்போது ‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வதந்தி என்ற கிரைம் திரில்லர் வெப் தொடரின் 2ஆம் பாகத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 30, 2025

DOGEலிருந்து வெளியேறும் மஸ்க்?

image

அமெரிக்க அரசின் வீண் செலவினங்களை, 130 நாள்களுக்குள், நாளொன்றுக்கு 1 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் குறைக்க செயல்திட்டம் தீட்டி வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். இதன்மூலம், USA அரசு பொறுப்பில் (DOGE) இருந்து வரும் மே மாதம் எலான் மஸ்க் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களை நீக்குவது உள்பட அவரது செயல்பாட்டிற்கு எதிராக அந்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் – 30 ▶பங்குனி – 16 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 06:00 AM – 07:00 AM & 03:30 PM – 04:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: பூரம் ▶நட்சத்திரம் : ரேவதி மா 6.37

News March 30, 2025

அண்ணனுக்கு நிச்சயமான பெண்ணை கடத்திய தம்பி

image

உ.பி.யில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, தம்பி கடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யோகேஷ் மணம் முடிக்க இருந்த பெண்ணை, அவரது தம்பி ராஜா கடத்திச் சென்றதாக பெண் வீட்டார் புகார் அளித்துள்ளனர். ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீஸ் தேடி வருகிறது. வீட்டில் இருந்த பணம், நகையுடன் பெண்ணை ராஜா கடத்திச் சென்றதாக புகார் அளித்திருப்பது சற்று சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எங்கயோ இடிக்குதுல!

error: Content is protected !!