News July 10, 2025
சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ரிலீஸ் தள்ளிவைப்பு

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஃப்ரீடம்’. இலங்கை சிறையில் இருந்து தப்பிக்கும் தமிழர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால், பொருளாதார காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. நாளை வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிற்பகலில் வெளியாகும்.
Similar News
News July 10, 2025
உள்நாட்டு பாதுகாப்பில் TN போலீஸ் முன்னிலை: CM

உள்நாட்டு பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு போலீசார் முன்னணி வகிப்பதை மீண்டும் ATS நிலைநாட்டியுள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக யாருக்கும் பிடிபடாமல் இருந்த அபுபக்கர் சித்திக் உட்பட 3 முக்கிய தீவிரவாதிகளை பிடித்த ATS-க்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். <<17015271>>கோவை குண்டு வெடிப்பு<<>> குற்றவாளி சாதிக் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News July 10, 2025
மாலை 6 மணி தலைப்புச் செய்திகள்

✪<<17019849>>மதிமுகவில் மீண்டும்<<>> ஏற்பட்ட பிளவு… வைகோ வைத்த குற்றச்சாட்டு
✪<<17018190>>CM நாற்காலி காலியாக <<>>இல்லை என சித்தராமையா திட்டவட்டம்
✪<<17020090>>விவாகரத்து புரளிக்கு<<>> நயன்தாரா கொடுத்த பதிலடி
✪<<17020693>>3-வது டெஸ்டில் <<>>நிதிஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்
✪<<17019270>> <<17019270>>வெயிலுக்கு ஒரு <<>>வாரத்தில் 2,300 பேர் பலி
News July 10, 2025
ஆஷா போன்ஸ்லே காலமானாரா? மகன் மறுப்பு

பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே காலமாகி விட்டதாக சமூகவலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது. இது அவரின் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியதோடு, பலரும் சமுகவலைதளங்களில் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். எனினும், இந்தத் தகவலை ஆஷா போன்ஸ்லேயின் மகன் ஆனந்த் போன்ஸ்லே மறுத்துள்ளார். ஆஷா போன்ஸ்லே காலமாகி விட்டதாக பரவும் தகவலில் உண்மையில்லை, அவர் நலமாக உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.