News December 19, 2024

சபரிமலை ஐயப்பனை தரிசித்த சசிகுமார்!

image

நடிகரும், இயக்குநருமான சசிகுமார் சபரிமலை ஐயப்பனை தரிசித்து உள்ளார். மாலை அணிந்து 48 நாள்கள் ஐயப்பனுக்கு விரதமிருந்து அவர் இருமுடி கட்டி சக அய்யப்ப பக்தர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நந்தன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சசிகுமார் தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் சிம்ரன் உடன் நடித்து வருகிறார்

Similar News

News September 17, 2025

பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவினார்

image

BJP, திண்டுக்கல் மேற்கு மாவட்ட Ex செயலாளர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட 300 பேர் திமுகவில் இணைந்தனர். பழனியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக, தவெகவில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். காலை உணவு திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள மகுடீஸ்வரனை திமுகவில் இணைத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.

News September 17, 2025

டிரம்ப் ஆதரவாளர் கொலை: இளைஞருக்கு மரண தண்டனை?

image

டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட டைலர் ராபின்சன் மீது கொலை உள்பட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டைலரை சுட்டுக் கொல்லும் வகையில் மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.<<17683928>> சார்லியை<<>> கடந்த 10-ம் தேதி பொதுவெளியில் வைத்து டைலர் சுட்டுக் கொன்றார்.

News September 17, 2025

PAK vs UAE போட்டியில் நடுவர் மாற்றம்?

image

IND vs PAK போட்டியில் நடுவராக இருந்த ஆண்டி பைக்ராஃப்டை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என <<17723508>>பாக்.,<<>> எச்சரித்து இருந்தது. இதையடுத்து, இன்றைய போட்டியில் பைக்ராஃப்டிற்கு பதிலாக, ரிச்சி ரிச்சர்ட்சனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடுவராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அறிவிக்கப்பட்ட படி இன்று PAK vs UAE மோதும் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!