News July 7, 2025
கல்லூரிகளில் இசை வெளியீடு: சசிகுமார் அதிருப்தி

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பிரீடம்’. சத்யசிவா இயக்கிய இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார் கல்வி நிறுவன வளாகங்களில் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதில் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை பார்க்க அழைப்பதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
Similar News
News July 7, 2025
தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிப்பு

தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி கடைகளைத் தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரம் 8 மணியிலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும் வாராந்திர வேலை நேரம் 48 மணி நேர வரம்பை தாண்டக் கூடாது என்ற விதிமுறையும் நடைமுறையில் இருக்கும்.
News July 7, 2025
வரலாற்றில் இன்று நடந்தது என்ன?

1456ம் ஆண்டு – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவர் என அவர் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.1575ம் ஆண்டு – இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது.1799ம் ஆண்டு – பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.1865ம் ஆண்டு – ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
News July 7, 2025
விஷ்ணு விஷால் குழந்தைக்கு பெயர் வைத்த அமீர்கான்

நடிகர் விஷ்ணு விஷால் குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் பெயர் வைத்துள்ளார். விஷ்ணு விஷால் முன்னாள் பேட்மிட்டன் வீராங்கணை ஜுவாலா கட்டா தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி பெண்குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமீர்கான் குழந்தைக்கு மிரா என பெயர் வைத்துள்ளார். மிரா என்றால் நிபந்தனை அற்ற அன்பு மற்றும் அமைதி என பொருள்.