News September 2, 2025
உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சசிகாந்த்

தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தி, காங்., MP சசிகாந்த் செந்தில் கடந்த 4 நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை, ராகுல் தொலைபேசி மூலமாகவும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் MP-க்கள் நேரிலும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர், தற்காலிகமாக உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
Similar News
News September 2, 2025
தீபாவளி பரிசு… சம்பளம் உயர்கிறது

மத்திய அரசின் புள்ளியியல் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். இதன் அடிப்படையில், தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 55%-லிருந்து 58%ஆக 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், தமிழக அரசும் அகவிலைப்படியை 3% உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 2, 2025
ஆட்சியில் நிதி பற்றாக்குறை குறைந்திருக்கிறது: அமைச்சர்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், சிவசங்கர் விளக்கமளித்தனர். மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாத போதும் திட்டங்களை செயல்படுத்தியதாக தெரிவித்தவர்கள், திமுக ஆட்சி அமைந்த பிறகு, 4.91 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 3%-ஆக குறைந்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
News September 2, 2025
கொலை செய்யப்பட்டவர் ரீல்ஸில் வந்த அதிசயம்!

2017-ல் திருமணமான நிலையில், ஒரே வருடத்தில் கணவர் காணாமல் போகிறார். பெண் குடும்பத்தினர் தான் அவரை கொன்று விட்டதாக மாப்பிள்ளை வீட்டார் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், 7 ஆண்டுகள் கழித்து, ரீல்ஸில் வேறொரு பெண்ணுடன் கணவர் இருப்பதை பார்த்துள்ளார் மனைவி. வரதட்சணை புகார் அளித்ததால், கணவர் அப்போது எஸ்கேப்பாகி விட்டார். இச்சம்பவம் உ.பி.யின் ஹர்தோயில் நிகழ்ந்துள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.