News March 11, 2025
ஓபிஎஸ் ஆதரவாளரை சந்தித்த சசிகலா, டிடிவி

ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சசிகலா, டிடிவி, தினகரன், திவாகரன் ஆகியோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், இதுவரை தனித்தனியாக அரசியல் செய்த மூன்று தரப்பும் ஒன்றாக சந்தித்துள்ளனர். இதுகுறித்து சசிகலா, ‘இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது’ என சூசகமாக பதிலளித்துள்ளார்.
Similar News
News March 11, 2025
விஜய் இதை செய்ய வேண்டும்… ஹுசைனியின் கடைசி ஆசை

விஜய்யின் பத்ரி படம் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஹுசைனி. தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தான் கராத்தே கற்றுக் கொடுக்கும் இடத்தை விற்க முடிவு செய்துள்ளார். பவன் கல்யாண் அங்கு கராத்தே கற்றதால் அந்த இடத்தை அவர் வாங்க வேண்டும் என ஹுசைனி விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல், விஜய் வீட்டுக்கொரு வில்வித்தை வீரரை உருவாக்க வேண்டும் என்றும் ஹுசைனி கோரிக்கை விடுத்துள்ளார்.
News March 11, 2025
NEP விவகாரம்: பிரதானுக்கு அன்பில் மகேஷ் பதிலடி

தேசிய கல்விக் கொள்கையை(NEP) முதலில் ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு பின்னர் யூ-டர்ன் அடித்ததாக பார்லிமென்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், தவறான தகவலைப் பரப்புவது உண்மையை மாற்றிவிடாது எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்விக் கொள்கையை குறைத்து மதிப்பிடும் தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 11, 2025
குழந்தைகளின் பசி போக்க ஒரு தாயின் போராட்டம்

குழந்தைகளை காக்க ஒரு தாய் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு சிறந்த உதாரணமாக, லண்டனைச் சேர்ந்த மேரியை சொல்லலாம். இவருக்கு 4 குழந்தைகள். 1914ல் கணவர் இறந்துவிட, குழந்தைகளை கவனிப்பது மேரிக்கு சவாலாக இருந்தது. இந்த நேரத்தில் அவர் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, உலகின் அசிங்கமான பெண்ணுக்கான போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கிடைத்த பணத்தை வைத்து, குழந்தைகளின் பசியை போக்கினார்.