News April 8, 2024
புறக்கணித்த சசிகலா… வேதனையில் தினகரன்!

TTV தினகரன், ஓபிஎஸ் போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய சசிகலா நடராஜனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிக்கட்ட முயற்சியாக, தினகரனே நேரடியாக சசிகலாவிடம் பேசிப் பார்த்தாராம். ஏற்கெனவே அவருடன் மனக்கசப்பில் இருந்த மன்னார்குடி திவாகரன், இதுதான் சரியான நேரமென குறுக்கிட்டு பிரசாரத்துக்குச் செல்லக் கூடாது என்று சசிகலாவை தடுத்தாராம். இதனால், தினகரன் மன வேதனையில் உள்ளாராம்.
Similar News
News January 18, 2026
அதிமுக கூட்டணியை உறுதி செய்கிறாரா TTV?

கூட்டணியை உரியவர்கள் அறிவிப்பார்கள் என TTV தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில், ஜன.23-ல் தமிழகத்தில் PM மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் TTV பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுக மா.செ.,க்கள் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர தயார் நிலையில் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளாராம். இதனால் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணியில் TTV இணைவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News January 18, 2026
விஜய்க்கு கபில்சிபல் எச்சரிக்கை!

பாஜகவுடன் சமரசம் செய்தால் DCM பதவி கிடைக்கலாம், ஆனால் உங்கள் அரசியல் எதிர்காலம் முடிந்துவிடும் என MP கபில்சிபல் கூறியுள்ளார். மேலும், வெற்றிபெற முடியாத மாநிலங்களில் அங்குள்ள சிறிய கட்சிகளுடன் BJP கூட்டணி அமைக்கும், ஆனால் ஆட்சிக்கு வந்தபின் புறக்கணிக்கும் எனவும், அதை TN-ல் முயற்சிப்பதாகவும் எச்சரித்துள்ளார். விஜய்யை NDA கூட்டணிக்குள் இழுக்க BJP முயற்சிப்பதாக பேசப்படுவது கவனிக்கத்தக்கது.
News January 18, 2026
இந்த அறிகுறி இருந்தால் சர்க்கரை நோய் கன்பார்ம்!

உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் சில அறிகுறிகள் மூலம் அதை அறிந்து கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அளவுக்கு அதிகமான தாகம், பசி உணர்வு அதிகரிப்பு, அதீத உடல்சோர்வு, கண்பார்வை பிரச்னை, புண், காயம் மெதுவாக ஆறுவது உள்ளிட்டவை அதில் அடங்குமாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனையை பெறுவது நல்லது.


