News June 5, 2024
இணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

அதிமுகவின் வளர்ச்சிக்காக, தமிழக மக்களின் வாழ்வுக்காக ஒன்றிணைவோம் என, தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஒருசிலரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க இயலாது எனக் கூறிய அவர், இணைந்து செயல்பட தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், சசிகலா நீக்கப்பட்டதே, தேர்தல் தோல்விக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 5, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு கோயில் விசேஷம் காரணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை(மார்ச் 6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. இதேபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9-ல் புதுக்கோட்டை, பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10-ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். SHARE IT
News March 5, 2026
BREAKING: மே.வங்க கவர்னராகிறாரா R.N.ரவி?

தமிழக கவர்னர் R.N.ரவி, மே.வங்க மாநில கவர்னராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே.வங்க CM மம்தா பானர்ஜி இதை தன் X-பதிவில் குறிப்பிட்டுள்ளார். அம்மாநில கவர்னராக இருந்துவரும் சி.வி.ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா செய்ததால், R.N.ரவி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக தன்னிடம் உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக மம்தா கூறியுள்ளார்.
News March 5, 2026
எரிவாயு விநியோகத்தை குறைக்க முடிவு: GAIL

ஈரான் – இஸ்ரேல் போரால் இந்தியாவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக GAIL நிறுவனம் தெரிவித்துள்ளது. கத்தாரில் இருந்து இந்தியா ஆண்டுதோறும் பெருமளவு LNG எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது ஹார்முஸ் நீரிணை மூடல், போர் தாக்கம் காரணமாக இறக்குமதி தடைபட்டுள்ள நிலையில், தங்களது LNG எரிவாயு விநியோகத்தை குறைக்க உள்ளதாக GAIL அறிவித்துள்ளது.


