News June 4, 2024
கடும் போட்டிக்கு பின் சசி தரூர் வெற்றி

திருவனந்தபுரம் தொகுதியில் கடும் போட்டிக்கு பிறகு காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 14,926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகருக்கும், அவருக்கும் இடையே காலை முதல் கடும் போட்டி நிலவியது. முன்னிலை நிலவரங்கள் அவ்வபோது மாறி வந்தன. இருப்பினும், இறுதியில் சசி தரூர் வெற்றி வாகை சூடினார்.
Similar News
News August 13, 2025
ICC சிறந்த வீரர்: சரித்திரம் படைத்த சுப்மன் கில்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்ட <<17384015>>கேப்டன் சுப்மன் கில்<<>>, ஜூலை மாதத்தின் சிறந்த ICC வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், 4-வது முறையாக இந்த விருதை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். கில் ஏற்கெனவே, 2023 ஜனவரி, செப்டம்பர் மற்றும் 2025 பிப்ரவரி மாதங்களிலும் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.
News August 13, 2025
5,180 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

SBI வங்கியில் காலியாக உள்ள 5,180 Junior Associates (கிளார்க்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 380 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 28. தேர்வு முறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள், நேர்காணல். தேர்வுக் கட்டணம்: ₹750. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.26. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News August 13, 2025
M.A. பகவத் கீதை படிக்க தயாரா?

M.A. பகவத் கீதை படிப்பை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவை கற்பிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய கலாசாரத்தை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பட்டப்படிப்பை கற்பதன் வழியாக தலைமைத்துவம், முடிவெடுக்கும் திறன், சமூக அரசியல் அம்சங்களை மாணவர்கள் அறிய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.