News April 14, 2024
சரப்ஜித் சிங் கொலை குற்றவாளி சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் லாகூரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அமீர் சர்பராஸ் தம்பா மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்த இந்தியரான சரப்ஜித் சிங் 2013ஆம் ஆண்டு சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் சர்பராஸ்க்கு எதிராக ஆதாரமில்லையென நீதிமன்றம், 2018இல் விடுதலை செய்திருந்தது.
Similar News
News October 31, 2025
ரோஹித்துக்கு நன்றி சொல்ல வேண்டும்: டிராவிட்

ODI, டி20-களில் இந்தியா Aggressive-ஆக விளையாட ரோஹித் சர்மா தான் காரணம் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கோச்சாக நியமிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இதுதொடர்பாக ரோஹித்துடன் நீண்ட விவாதத்தை மேற்கொண்டதாகவும், அதை செயல்படுத்தியதற்கு ரோஹித்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்திய அணி தொடர்ந்து அதே பாதையில் பயணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
அதிக தங்க நகை அணிந்தால் ₹50,000 அபராதம்!

அதிக தங்க நகை அணிவதை நம்மூரில் கௌரவமாக பார்ப்பார்கள். அதிக மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஆனால், நகை இல்லாத ஏழைகள் என்ன செய்வார்கள் என்று யோசித்துள்ளது ஹரியானாவில் உள்ள காந்தார் கிராமம். அதனால், அதிக தங்க நகை அணிந்தால் அங்கு ₹50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. சுப தினத்தில் கூட கம்மல், மூக்குத்தி, தாலி மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதற்கு பெண்கள் ஒத்துக்கொண்டது தான் ஆச்சரியம்.
News October 31, 2025
ராசி பலன்கள் (31.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


